அண்மைய செய்திகள்

recent
-

கால் நூற்றாண்டு காலமாக தொடரும் உயிர்வலி!


ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அலசப்படுகிறது, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேரின் தண்டனைக் குறைப்பு விவகாரம்!

கால் நூற்றாண்டு காலமாக சிறைக்குள் அல்லாடிக்கொண்டு இருக்கும் ஏழு பேரின் வாழ்க்கையில், கடந்த ஆண்டு திடீரென ஒரு நாள் ஒளிவெள்ளம் வந்து, இரண்டே நாட்களுக்குள் மீண்டும் கும்மிருட்டாகிவிட்டது.


ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் மரண தண்டனை ஒழிப்பு இயக்கம் தொடர்ச்சியான போராட்டங் களையும் பிரச்சாரத்தையும் நடத்தியது. அதன் எதிரொலியாக, அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தன. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மரண தண்டனையை அகற்றக் கோரி குரல் கொடுக்க.. அதே சமயம், மரணதண்டனைக் கைதிகளின் கருணைமனுக்கள் நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டதால், அந்த தாமதத்தைக் காரணம் கூறி, 11 மரண தண்டனைக் கைதி களுக்கு ஆயுள்தண்டனை யாகக் குறைத்து, உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.



அதையடுத்து, ராஜீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்துவரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக் கப்பட்டது. 2014 பிப்ரவரி 18-ல் அப்போதைய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வே, இந்த தீர்ப்பை அளித்தது.
கால் நூற்றாண்டு காலமாக தொடரும் உயிர்வலி! Reviewed by NEWMANNAR on July 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.