ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இலங்கையை சேர்ந்த மேலும் பலர்
இலங்கையைச் சேர்ந்த மேலும் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் சிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஆறு முதல் எட்டு பேர் வரையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் பலருடைய சுய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், கலவெல பிரதேசத்திலிருந்து சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த இலங்கையரின் நெருங்கிய நண்பர்களே இவ்வாறு இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்த நபர்களைத் தவிர தீவிரவாத கடும்போக்குடைய தரப்புக்களுடன் தொடர்புடைய மேலும் பலர் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன என அரச புலானய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இலங்கையை சேர்ந்த மேலும் பலர்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2015
Rating:

No comments:
Post a Comment