அலரி மாளிகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளா? கண்காணிக்குமாறு ரணில் வலியுறுத்து
பிரதமர் காரியாலயம் மற்றும் அலரிமாளிகை என்பனவற்றில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா? என கண்டறிய தேர்தல் அதிகாரிகளை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் செயலகத்தை இன்று கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் முடிவடையும் வரையில் இது தொடர்பான கண்காணிப்பில் ஈடுபடுமாறும் அவர் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தை வேண்டியுள்ளார். பிரதமர் காரியாலயத்திலும் அலரி மாளிகையிலும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பொதுச் சொத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவது தேர்தல் சட்ட முரண் எனவும் பிரதமருக்கு எதிராக அண்மையில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளா? கண்காணிக்குமாறு ரணில் வலியுறுத்து
Reviewed by Author
on
July 20, 2015
Rating:

No comments:
Post a Comment