அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் ஒற்றுமையாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்-மன்னார் வாக்காளர்கள்.-Photos



தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று(25) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் விசேட கூட்டம் இடம் பெற்றது.

இதன் போது வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கலான எஸ்.வினோ நோகராதலிங்கம்,சிவசக்தி ஆனந்தன்,மற்றும் வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மன்னார் பள்ளிமுனை மீனவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த குறித்த கலந்துரையாடலின் போது அக்கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்னர்.

இதன் போது கடந்த காலங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேற்கொள்ளாத பணிகளை சுட்டிக்காட்டிய கிராம முக்கியஸ்தர்கள் இனி வரும் காலங்களில் அவ்வாறான தவறுகளை விட வேண்டாம் என சுட்டிக்காட்டினர்.

அத்தோடு தற்போதைய பாராளுமன்ற பொதுத்தேர்தலில் புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள் என வைக்கப்படும் தன்னிச்சையான கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் ஒற்றுமையாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும் எனவும்,தன்னிச்சையாக தனி இலக்கங்களுக்கு வாக்கு சேர்ப்பதையும் தாம் கண்டிப்பதாக குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.










தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் ஒற்றுமையாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்-மன்னார் வாக்காளர்கள்.-Photos Reviewed by NEWMANNAR on July 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.