அண்மைய செய்திகள்

recent
-

மஹிந்தவின் இனவாதக் குழுவை தோற்கடித்து தேசிய அரசை அமைக்க அணி திரள வேண்டும்...


மஹிந்த ராஜபக்ஷவின் இனவாதக் கூட்டணியைத் தோற்கடித்து பெரும்பான்மை பலமுடைய தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஓகஸ்ட் 17 இல் அனைவரும் ஓரணி திரள வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்று கையில்:

நாம் கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் நாட்டில் தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றி பேசினோம். இப்போது நாம் தேசிய முன்னணியொன்றை அமைத்துள் ளோம். அந்த வகையில் இன்றைய நாள் மிக முக்கியமானதாகும்.

நாட்டிலுள்ள பிரதான கட்சியுடன் சிங்கள முற்போக்கு முன்னணியான ‘ஹெல உறுமய’ கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முற்போக்குக் குழு, ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க போன்றவர்களும் இந்த முன்னணியில் எம்மோடுள்ளனர்.

முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம், மற்றும் அமைச்சர் ரிஸாட் பதியுத்தீன், முற்போக்கு தமிழ் மக்களை பிரதிநிதி நிதித்துவப்படுத்தி எமது கட்சியான ஜனநாயக ஐக்கிய முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் முன்னணி ராதாகிருஷ்ணன், அமைச்சர் திகாம்பரம் போன்றோரும் ஒன்றிணைந்துள்ளனர்.

இது பெரும் தேசிய முன்னணியாக உருவாகியுள்ளது.

நாம் ஜனவரி 8ம் திகதி கிடைத்த மக்கள் ஆணையை முன்னெடுத்துச் செல்வதே எமது பயணம். ஆகஸ்ட் 17ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எமது அரசாங்கம் அமைவது உறுதி.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணியில் இனவாதம், அடிப்படைவாதம் அரசியல் பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை அந்த அணி முன்னெடுத்துச் செயற்படுகிறது.

நாட்டைப் பாதுகாக்க வந்த அந்தத் தலைவர் அதில் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். அந்த நன்றிக் கடனாக மக்கள் பெரும் வாக்குகளை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர். நாடு என்ற நிலை மாறி பின்னர் அவரது கவனம் குடும்பத்தைப் பாதுகாப்பது தொடர்பில் சென்றது.

தமது குடும்பம், உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரைப் பாதுகாக்கச் சென்றதில் அவரது பயணம் வழிதவறிவிட்டது.

இந்த நிலையில் எமது நோக்கம் இந்த நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப் புவதாக வேண்டும். ஒரு போதும் பிரிவி னைவாதம் இந்த நாட்டில் தலைதூக்க இடமளிக்க முடியாது.

வடக்கு மக்கள் கடந்த தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்களித்ததன் மூலம் பிரிவினைவாதத்தைத் தோற்கடித்தனர். இதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற வகையில் முழுமையான பங்களிப்புச் செய்தேன்.

இனி எமது தேசிய பயணத்தை ஆரம்பிக்க நாம் எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி ஒன்றுபடுலோம்.

நாட்டில் இன வாதத்தையும் பிரிவினை வாதத்தையும் அடிப்படைவாதத்தையும் இல்லாதொழித்து உன்னதமான ஒரு நாட்டை உருவாக்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தா.
மஹிந்தவின் இனவாதக் குழுவை தோற்கடித்து தேசிய அரசை அமைக்க அணி திரள வேண்டும்... Reviewed by Author on July 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.