அண்மைய செய்திகள்

recent
-

12 வருட காலமாக எயிட்ஸ் நோய்க்கான மருந்து எடுக்காத நிலையில் நோய் தணிவடைந்த அதிசயம்...


பிரான்ஸைச் சேர்ந்த 18 வயது யுவ­தி­யொ­ருவருக்கு ஏற்பட்ட எயிட்ஸ் நோய் 12 வருட காலத்­திற்கு மேலாக சிகிச்சை பெறாத நிலையில் அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் தணி­வ­டைந்­துள்­ள­தாக மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

கன­டாவின் வான்­கூவர் நகரில் இடம்­பெற்ற சர்­வ­தேச எயிட்ஸ் சபையின் கூட்­டத்தின் போது மருத்­து­வர்­களால் இது தொடர்­பான தக­வல்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

மேற்­படி கூட்­ட­மா­னது கடந்த 19 ஆம் திக­தி­யி­லி­ருந்து இன்று புதன்­கி­ழமை வரை இடம்­பெற்று வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் இந்தக் கூட்­டத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட மேற்­படி அறிக்­கை­யின் பிரகாரம் இது குழந்­தை­யொன்­றுக்கு எச்.ஐ.வி. வைரஸ் தொற்று நீண்ட காலப் பகு­தியில் தணி­வ­டைந்த உலகின் முத­லா­வது சம்­ப­வ­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

எயிட்ஸ் தொற்­றுக்­குள்­ளான சில­ருக்கு சிகிச்சை நிறுத்­தப்­பட்ட பின்னர் எவ்­வாறு இந்த வைரஸ் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­ப­டு­வது சாத்­தி­ய­மா­னது என்­பது தொடர்பில் மேல­திக ஆய்வு அவ­சி­ய­மா­க­வுள்­ள­தாக மருத்­துவ நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.

1996 ஆம் ஆண்டு பிறந்த குறிப்­பிட்ட பெண்­ணுக்கு, எயிட்ஸ் நோய்க்கு கார­ண­மான எச்.ஐ.வி. வைரஸ் தொற்று அவ­ரது தாயி­ட­மி­ருந்து பிறக்கும் போது ஏற்­பட்­டது.
அவ­ருக்கு பிறந்து 3 மாதம் முதல் எயிட்ஸ் நோய்க்கு எதி­ரான மருந்­துகள் வழங்­கப்­பட்டு வந்­துள்­ளன.

இந்­நி­லையில் அவர் 6 வயதுக் குழந்­தை­யாக வளர்ச்­சி­ய­டைந்த போது அவ­ரது குடும்­பத்­தினர் அவ­ருக்­கான சிகிச்­சையை நிறுத்த தீர்­மா­னித்­தனர்.இத­னை­ய­டுத்து 12 வரு­டங்கள் கழித்து தற்­போது 18 வயது யுவ­தி­யாக மாறி­யுள்ள அவ­ருக்கு குருதிப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்ட போது, அவ­ரது குரு­தியில் எச்.ஐ.வி. வைர­ஸு­களின் அளவு மிகவும் குறைந்திருப்பது அவதானிக்கப்பட்டது.

அந்த யுவதி எதுவித நோய் பாதிப்பு அறிகுறிகளுமின்றி இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

12 வருட காலமாக எயிட்ஸ் நோய்க்கான மருந்து எடுக்காத நிலையில் நோய் தணிவடைந்த அதிசயம்... Reviewed by Author on July 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.