காயத்திற்கு பிறகு களமிறங்கும் போல்ட்----

உலகின் அதிவேக வீரர் உசேன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளர் ஆவார். 100 மீட்டரில் 9.58 வினாடியில் கடந்தும், 200 மீட்டரில் 19.19 வினாடியில் கடந்தும் சாதனை படைத்தார். காயத்தால் அவதிப்பட்ட அவர் அதற்காக சிகிச்சை பெற்றார். அதன்பின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் நீண்ட காலத்துக்கு பிறகு களம் இறங்குகிறார்.
லண்டனில் ஒலிம்பிக் மைதானத்தில் தடகள போட்டி தொடங்குகிறது. இதில் உசேன் போல்ட் களம் இறங்குகிறார். அதிவேக 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடக்கிறது.
காயம் குணம் அடைந்து மீண்டும் பிரவேசம் அடைந்துள்ள உசேன் போல்ட் மீது அனைவரின் பார்வையும் விழுந்து உள்ளது. அவரது ஓட்டத்தை காண ஆர்வமுடன் உள்ளனர். இதுகுறித்து உசேன் போல்ட் கூறுகையில், நான் கடுமையான பயிற்சி மேற்கொண்டு இருக்கிறேன். அதன் பயன் எப்படி இருக்கும் என்று நாம் பார்ப்போம்.
இங்கே நான் தோற்கமாட்டேன். எப்போதும் நான் போட்டிக்கு தயாராகவே இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
காயத்திற்கு பிறகு களமிறங்கும் போல்ட்----
Reviewed by Author
on
July 25, 2015
Rating:

No comments:
Post a Comment