அண்மைய செய்திகள்

recent
-

இனவாதத்தை தோற்கடிக்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க-அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவிப்பு.

இந்த மண்ணை ,இந்த மாவட்டத்தை,இங்கு வாழ்கின்ற மக்களை எதிர்காலத்திலே நல்லதொரு பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய ஐக்கிய தேசியக் கட்சியிலே நாங்கள் பங்காளிக்கட்சிகளாக இணைந்திருப்பதாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(31) மன்னாரில் இடம் பெற்றது.இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையிலே,,,

கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டிலே எங்களுக்கென்று புரையோடிப்போயிருந்த இனப்பிரச்சினைக்கு நிறந்தரமான,எல்லோறும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தமிழ் பேசும் மக்கள் நிறந்தரமான,நிம்மதியாக வாழக்கூடிய நல்லதொரு தீர்வை எங்களுடைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசிலே நாங்கள் பெற்றுக்கொடுப்போம் என்பதனை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

தமிழ்,முஸ்ஸீம்,சிங்களம் இனவாதங்களை இந்த நாட்டிலே தோற்கடிக்கக்கூடிய ஒரே தலைவர் இந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமர் அவர்கள் என்பதை நான் உங்களிடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மஹிந்த ராஜபக்ஸ அரசிலே அமைச்சராக இருந்து நாங்கள் பல பணிகளை செய்தோம்.சமாதானத்தை கொண்டுவந்தோம்.

மூன்று இலட்சம் தமிழ் மக்களை மீள் குடியமர்த்துகின்ற பாரிய பொருப்பை சுமந்து கொண்டு மிதிவெடிகளை அகற்றி காடுகளை அழித்து, காணிகளை வழங்கி,தற்காலிக வீடுகளை அமைத்து,நிறந்தர வீடுகளை வழங்கி,உடைந்த பாடசாலைகள்,வைத்தியசாலைகளை புனரமைத்து மீனவ தொழிலை மேம்படுத்துவதற்காக படகுகளை வழங்கி,விவசாய நடவடிக்கைகளுக்காக அதற்கான உபகரணங்களை வழங்கி கடந்த காலங்களிலே நாங்கள் பல்வேறு உதவிகளை செய்தோம்.

இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை ஜனாதிபதியாக வருவதற்கு நாங்கள் ஒத்துழைப்பையும்,ஆதரவையும் வழங்கினோம்.

ஆனால் இரண்டாவது முறை ஜனாதிபதியாக வந்த பின் பெற்ற சமாதானத்தை அனுபவிக்க விடாமல் இந்த நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஒடுக்குவதற்காக மதவாதிகளை தூண்டிவிட்டு மதஸ்தளங்களை தாக்கிய அந்த வரலாறுகளை நாங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.

அதே போல் கடைகளை உடைத்து,கடைகளை எறித்து மனிதர்களுடைய உணவைப்பற்றி கேவலமாக பேசிய போதும் இந்த நாட்டிலே பொது பல சேனாவின் அட்டகாசம்,அனியாயம் நடந்த போது அதனை தடுத்து நிறுத்துங்கள் என்றும் சட்டத்தை நடை முறைப்படுத்துங்கள் என்று இந்த நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் மதஸ்தளங்களை பாதுகாப்பது பொலிஸாரின் கடமை.அதனை செய்யச் சொல்லுங்கள் என்றும் அதே போல சிறுபான்மை இனம் அச்சத்தோடு வாழ்கின்றது.

அந்த அச்சத்தை போக்குவதற்கு அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடை முறைப்படுத்துங்கள் என்றெல்லாம் நாங்கள் கேட்ட போது செவிடன் காதிலே ஊதிய சங்காகத்தான் மஹிந்த ராஜபக்ஸவிற்கு இருந்தது.

எனவே தான் சிறுபான்மை இல்லாமல்,சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் தன்னால் மீண்டும் ஜனாதிபதியாக வந்து இந்த நாட்டிலே மீண்டும் தன்னால் விரும்பியதை செய்ய முடியும் என்று அவர் அடம் பிடித்துக்கொண்டிருந்தார்.

எனவேதான் இந்த நாட்டிலே வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் எல்லோறும் ஒன்று சேர்ந்தோம்.

நாங்கள் இந்த நாட்டை பிரிக்கச் செல்லவில்லை.நாட்டை பிளவுபடுத்தச் சொல்லவில்லை.நங்கள் சொன்னதெல்லாம் நல்லதொரு தீர்வை தமிழ் பேசும் மக்களுக்கு வழங்குங்கள்.

அது மட்டுமின்றி கிடைத்த சமாதானத்தை எல்லோறும் அனுபவிப்பதற்கு வழிசெய்யுங்கள்.

அகதிகளாக சென்றவர்கள் மீண்டும் சொந்த மண்ணிலே கௌரவமாக வந்து வாழ்வதற்கு வீடுகளைக் கட்டிக்கொடுங்கள்.அபிவிருத்திகளை செய்யுங்கள் என்று சென்ன போது எங்கள் மீது அபான்டங்களைச் சுமத்தி இல்லாத,பொல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி எங்களை கேவலப்படுத்திய அந்த பொது பல சேனாவை ஒரு சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது அந்த பொது பல சேனா அறிவிக்கின்றது மஹிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதியாக்கப் போகின்றோம் என கூறினார்கள்.

கூறி இரண்டு நாட்கள் போகவில்லை இப்படிப்பட்ட துவேசமுல்ல நாசகார சக்தி இந்த நாட்டிலே இன்னுமொரு இனத்தால் மோதுவதற்கு,இன்னுமோர் அழிவு வருவதற்கு 30 வருடங்கள் தமிழ் பேசும் மக்கள் பட்ட கஸ்டம் எங்களினால் இன்னும் மறக்க முடியவில்லை.

வடக்கு கிழக்கில் மட்டுமின்றி நாடு முழுவதும் எமது சமூகம் அச்சத்தோடு வாழ்கின்றனர்.

பள்ளி வாசல்கள்,கோயில்களுக்கு செல்வதற்கு மக்கள் பயந்த நிலையிலே உள்ளனர்.பெண்கள் விரும்பிய உடைகளை அணிந்து
செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட கேவலமானவர்கள் ஆதரிக்கின்ற ஒரு ஜனாதிபதியை ஆதரிக்கக்கூடாது என்பதற்காக தைரியமாக மைத்திரிபால சிரிசேன அவர்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் ஆதரித்தோம்.

எங்களை அச்சுரூத்தினார்கள்,கொலை செய்வோம் என்றார்கள்,சிறையிலே அடைப்போம் என்றார்கள்,உங்களுக்கு அழிவு வந்து விட்டது என்றார்கள்.

ஆனால் இறைவன் நாடினால் தான் ஒருவனை அழிக்க முடியும் இறைவன் நாடாமல் எதுவும் அசையாது என்ற நூறு வீத நம்பிக்கை எங்களுடைய உள்ளத்திலே இருந்த காரணத்தினால் மஹிந்த அல்ல,கோட்டபாய அல்ல,எந்த ஆயுத தாரிகளை அனுப்பினாலும் உங்களை தோற்கடிப்போம் என்று தைரியமாக கூறினோம்.ஆட்சியிலே மாற்றம் வந்தது.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்த நாட்டின் பிரதமராக வந்தார்.நல்லாட்சி நூறு நாள் நல்லாட்சியிலே எதை மக்களுக்கு சொன்னார்கலோ 100 நாள் வேளைத்திட்டத்திலே எதை செய்வோம் என்று சொன்னார்கலோ குறிப்பாக 19 ஆவது திருத்தம்,பொருட்களின் விலை குறைப்பு,தொழில் வாய்ப்புக்கள்,அபிவிருத்தி இவ்வாறு எதைச் சொன்னார்களோ  அத்தனையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன அவர்களும்,பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களும் இணைந்து இந்த ஆட்சியிலே செய்துள்ளனர்.

ஆனால் இன்று ஒரு தேர்தல் வந்திருக்கின்றது.யாரை வீட்டிற்கு அனுப்பினோமோ,யாரை சிறுபான்மை சமூகம் ஒதுக்கியதோ அவர் இன்று பிரதமராக அமர்வதற்கு மாற்றுவடிவத்திலே வந்திருக்கின்றார்.அதனை கருத்தில் கொண்டு சிறுபான்மை இன மக்கள் எதிர்  காலத்தை கருத்தில் கொண்டு வாக்களித்து மீண்டும் எமக்கு அதாரவு வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இனவாதத்தை தோற்கடிக்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க-அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவிப்பு. Reviewed by NEWMANNAR on August 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.