56 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்...
சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் பல்வேறு அளெகரியங்களுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட 56 இலங்கை பணிப்பெண்கள் இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
குறித்த பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றினூடாக சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அங்கு தகுந்த முறையில் சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் உணவு மற்றும் தத்தமது வீடுகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்து கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
56 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்...
Reviewed by Author
on
August 28, 2015
Rating:

No comments:
Post a Comment