வித்தியா கொலை: சந்தேகநபர்களிடமிருந்து இரத்த மாதிரி பெற உத்தரவு...
வித்தியா படுகொலை தொடர்பில் கைதாகி விசாரிக்ப்பட்டு வரும் சந்தேகநபர்கள் 09 பேரினதும் இரத்த மாதிரிகளை பெறுமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மாணவி கொலை தொடர்பில் கைதாகியுள்ள 09 பேரும் இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன் இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர், தன்னை குறித்த கொலையுடன் தொடர்புபட்டவர் என ஒத்துக்கொள்ளுமாறு பொலிஸார் வற்புறுத்தியதாக கூறினார்.
புங்குடுதீவு மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கடந்த மே மாதம் 13 ஆம் திகதி புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்று மாலைவரை வீடு திரும்பாத நிலையில் அடுத்த நாள் (மே 14) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவர் கூட்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்ததோடு இவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக பிரேதப்பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் 09 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வித்தியா கொலை: சந்தேகநபர்களிடமிருந்து இரத்த மாதிரி பெற உத்தரவு...
Reviewed by Author
on
August 26, 2015
Rating:

No comments:
Post a Comment