சர்வதேச விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுக்கமாட்டார்: ஜெனிவாத் தகவல்கள்...
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நிபுணர்கள் குழுவின் விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்ற போதிலும்,
மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு எதிராக எந்த சர்வதேச விசாரணைக்கும் அழைப்பு விடுக்க மாட்டார் என ஜெனிவா ராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நடைபெற்ற போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் சம்பந்தமாக வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டு வந்த யோசனைக்கு இலங்கை இணங்கியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் மேற்படி நிலைப்பாட்டு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா யோசனை ஒன்றை கொண்டு வரவுள்ளதால், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு அழைப்பு விடுக்க மாட்டார் என அந்த தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை அடுத்த மாதம் ஆரம்பமாகும் மனித உரிமை பேரவையின் 30 வது கூட்டத் தொடரில் உத்தியோபூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட பின்னர்,
உறுப்பு நாடுகளின் அனுமதியுடன் இலங்கை சம்பந்தமாக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் என மனித உரிமை ஆணையாளர் இதற்கு முன்னர் யோசனை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட அரசாங்க அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர், தேசிய விசாரணையை நடத்த இலங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகக்கு ஆதரவு வழங்கும் யோசனை ஒன்றை அடுத்த மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்தது.
சர்வதேச விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுக்கமாட்டார்: ஜெனிவாத் தகவல்கள்...
 Reviewed by Author
        on 
        
August 30, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
August 30, 2015
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
August 30, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
August 30, 2015
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment