’கற்பழிப்பு சம்பவங்களுக்கு பெண்கள் தான் முழு காரணம்’: பிரபல பாடகரின் கருத்தால் வெடிக்கும் சர்ச்சை...
பெண்கள் கற்பழிப்பிற்கு உள்ளாவதற்கு அவர்கள் தான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல பெண் பாடகர் ஒருவரின் கருத்திற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த கிரைஸ்சி ஹைண்டே(63) என்ற பெண் பாடகர் வார பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
கிரைஸ்சி அளித்த பேட்டியில், ‘காம உணர்வுகள் என்பது மனிதர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும். ஆனால், அதனை தூண்டிவிட்டு கற்பழிப்பிற்கு முதல் காரணமாக அமைவது பெண்கள் உடுத்தும் ஆபாச ஆடைகள் தான்.
சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணின் ஆடை அறைகுறையாகவும், மிக மிஞ்சிய கவர்ச்சியுடன் இருந்தால் அது பார்ப்பவர்களுக்கு மோகத்தை தூண்ட தான் செய்யும்.
ஆபாச ஆடைகள் மட்டும் இன்றி, குடித்துவிட்டு தள்ளாடியவாறு சாலையில் செல்லும் பெண்களை பார்க்கும் ஆண்களுக்கு தவறு செய்ய தான் எண்ணம் வரும். இது முழுக்க முழுக்க பெண்களின் தவறு தான்.
பெரும்பாலான கற்பழிப்பு சம்பவங்கள் பெண்கள் குடித்துவிட்டு, போதை பொருள் அருந்திவிட்டு இரவு நேரங்களில் சாலையில் செல்லும்போது தான் இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.
ஒருவேளை, நாகரீகமாக, மற்றவர்களின் முகம் சுழிக்காதவாறு உடை உடுத்திக்கொண்டு செல்லும்போதும் கற்பழிப்பு நிகழ்ந்தால், அது மட்டுமே அந்த ஆணின் குற்றம் ஆகும்.
மேலும், தனக்கு 21 வயது இருந்தபோது போதையில் இருந்த என்னை சில நபர்கள் அழைத்து சென்று மிகவும் கொடுமைப்படுத்தி கற்பழித்தனர். இந்த சம்பவத்திற்கு காரணம் என்னுடைய தவறு தான்.
இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு பெண்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என கிரிஸ்சி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், கிரிஸ்சியின் கருத்திற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
விக்டிம் சப்போர்ட் என்ற அமைப்பின் இயக்குனரான லூசி ஹாஸ்டிங்ஸ் கூறுகையில், கற்பழிப்பிற்கு நிச்சயமாக பெண்கள் காரணமாக இருக்க முடியாது. அவர்கள் எந்த பொறுப்பும் ஏற்கவும் முடியாது.
ஒரு சிக்கலான சூழலில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் அதிலிருந்து மீளமுடியாமல் பலவீனமாக மாறுவதால் தான் கற்பழிப்பிற்கு உள்ளாக நேரிடுகிறது.
ஆபாசமாக ஆடை உடுத்தியிருந்தாலும், ஆபாசம் இல்லாமல் ஆடை உடுத்தியிருந்தாலும் கூட பெண்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் ஆண்களின் வெறிச்செயலுக்கு ஆளாகிறார்கள். இதில் பெண்களை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என லூசி கருத்து தெரிவித்துள்ளார்.
’கற்பழிப்பு சம்பவங்களுக்கு பெண்கள் தான் முழு காரணம்’: பிரபல பாடகரின் கருத்தால் வெடிக்கும் சர்ச்சை...
Reviewed by Author
on
August 30, 2015
Rating:

No comments:
Post a Comment