இந்தியா 312 ஓட்டங்கள் குவிப்பு: இஷாந்த் ஷர்மா வேகத்தில் தடுமாறும் இலங்கை...
இந்தியா, இலங்கை இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 312 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மழை காரணமாக தடுமாற்றத்துடன் இந்திய அணி விளையாட தொடங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய புஜாரா 14 பவுண்டரியுடன் சதம் கடந்து 145 ஓட்டங்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அமித் மிஸ்ரா அரைசதம் கடந்து 59 ஓட்டங்களும், ரோகித் ஷர்மா 26 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை சார்பில் தம்மிக பிரசாத் 4 விக்கெட்களையும், ஹேரத் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஊபுல் தரங்கா 4 ஓட்டங்களும், கௌசல் சில்வா 3 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கருணாரத்ன 11 ஓட்டங்களிலும், சண்டிமால் 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
44.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. அதிகபட்சமாக குஷால் பெரரா 55 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டும், ஸ்டுவர்ட் பின்னி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா 312 ஓட்டங்கள் குவிப்பு: இஷாந்த் ஷர்மா வேகத்தில் தடுமாறும் இலங்கை...
Reviewed by Author
on
August 30, 2015
Rating:

No comments:
Post a Comment