அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆரம்பம்...
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விளங்கும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் 135 ஆவது அத்தியாயம் அமெ ரிக்காவின் நியூயோர்க் நகரில் நாளை முதல் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திலுள்ள சேர்பியாவின் நொவாக் ஜோகோவிச், 2 ஆவது இடத்திலுள்ள சுவிட் ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 3 ஆவது இடத்திலுள்ள பிரித்தானியாவின் அன்டி மர்ரே ஆகியோருக்கிடையில் பலத்த போட்டி நிலவும் என கருதப்படுகிறது.
இவர்களைத் தவிர ஸ்பெய்னின் ரபேல் நடால், அண்மையில் நடைபெற்று முடிந்த சின் சினாட்டியில் பட்டத்தை வென்று மீண்டும் தனது பழைய ஆட்டத்திறனுக்கு வந்துள்ளார். இதனால் இவரும் பட்டத்தை வெல்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத் திலுள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ரஷ்யா வின் மரியா ஷரபோவா உள்ளிட்ட முன்னணி வீரர்களிடையே அதிக போட்டி நிலவினாலும், அண்மைக்காலமாக செரீனா வில்லியம்ஸ் தான் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதனால் பெண்களுக்கான பட்டத்தை இவர் வெற்றி பெறக்கூடும்.
இவ்வாறு இவர் இந்த கிராண்ட் ஸ்லாம் தொடரில் சம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும் பட்சத்தில் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் பகிரங்கப் பிரிவில் அதிக தடவைகள் (22) சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய வீராங்கனை யான ஜேர்மனியின் ஸ்டெபி கிராப்பின் சாதனையை சமன் செய்வார்.
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆரம்பம்...
Reviewed by Author
on
August 30, 2015
Rating:

No comments:
Post a Comment