நடந்து முடிந்த பொது தேர்தலில் 33 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை...
5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு
நடந்து முடிந்த பொது தேர்தலில் வாக்காளர்களின் விழிப்புணர்வு இல்லாமை காரணமாக அரை மில்லியனுக்கும் (5 இலட்சத்துக்கும்) அதிகமாக வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சிக்கலான வாக்களிப்பு முறையும் பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர் களுமே வாக்குகள் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
இதேவேளை நிராகரிக்கப்பட்ட அநேகமான வாக்குச் சீட்டுக்கள் சுயேச்சைக் குழுக்களுக்குரியவையென்றும் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார்.
கணக்கெடுப்பின்படி 5 இலட்சத்து 17 ஆயிரத்து 123 வாக்குகள் நிராகரிக்கப்பட் டுள்ளன. இது 4.42 சதவீதமாகும். இதற்கு மேலதிகமாக பதிவு செய்யப்பட்ட 15 மில்லியன் வாக்காளர்களில் 3.3 மில்லியன் வாக்காளர்கள் அன்றைய தினம் வாக்களிக்கவில்லை.
இதன்படி புதிய பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் 25 சதவீத வாக்காளர்கள் பங்குபற்றவில்லை.
கணக்கெடுப்பில் ஈடுபட்ட அதிகாரிகளின் தகவல்களின்படி நிராகரிக்கப்பட்டவர்களின் அநேகமான வாக்காளர்கள் இரண்டு கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர். அதே நேரம் சிலர் விருப்பு வாக்குகள் குறித்து குழப்பமடைந்துள்ளனர்.
நாடு முழுவதுமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலிருந்தே அதிகூடிய 56 ஆயிரத்து 246 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதன் மூலம் வாக்குச் சீட்டுக்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.
வாக்குச் சீட்டின் நீளம் வாக்காளர்களி டையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அதேநேரம்
வாக்காளர்களிடையே காணப்பட்ட அக்கறையின்மையே இந்த நிராகரிப்பிற்கு காரணமென மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார்.
வாக்குச் சீட்டின் சுமார் 02 அடி நீளமும் கட்சிகளின் இலட்சினைகளும் பல்வேறு சுயேச்சைக் குழுக்களும் வாக்காளர்களிடயே குழப்பத்தை தோற் றுவித்துள்ளது.
மேலும் அநேகமானவர்கள் கட்சிக்கு சரியாக புள்ளடியிட்டுள்ளபோதும் விருப்பு வாக்குகளையே தவற விட்டருப்பதாக தெரிவத்தாட்சி அதிகாரி கூறினார்.
சில வாக்காளர்கள் வாக்குச்சீட்டு முழுவதிலும் புள்ளடியிட்டுள்ள அதேநேரம் சிலர் கட்சிகளுக்கு முன்பு ஏதோ எழுதியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்திலிருந்து 43 ஆயிரத்து 372 வாக்குகள் நிராகரிக்கப் பட்டுள்ளன. இதற்கு காரணம் விருப்பு வாக்குகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் இலக்கங்களிடையே ஏற்பட்ட குழப்பமேயா குமென மாவட்டச் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.
வாக்குச் சீட்டின் 2.25 அடி நீளமும் வாக்காளர்களிடையே முக்கிய செல்வாக்கு செலுத்தியுள்ளதென்றும் அவர் கூறினார்.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளன. தேர்தல் சட்ட விதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டிய அதேநேரம் மக்கள் அது குறித்து விழிப்புணர்வளிக்கப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றும் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
மேலும் கட்டுப்பணத்தின் பெறு மானத்தை அதிகரிப்பதன் மூலம் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைகளின் எண்ணிக் கையை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியுமென்றும் அவர் நம்பிக்கை வெளி யிட்டார்.
நடந்து முடிந்த பொது தேர்தலில் 33 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை...
Reviewed by Author
on
August 30, 2015
Rating:

No comments:
Post a Comment