அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிவில் பாதுகாப்பு குறித்து விசேட கலந்துரையாடல். Photos

மன்னார் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட 42 கிராம அலுவலகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த கிராம அலுவலகர்கள் மற்றும்சிவில்  பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கும், மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபில்யு.எம்.எம்.விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை(25) மாலை விசேட சந்திப்பு மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது கிராம அலுவலகர்கள்,சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள்,கிராம முக்கியஸ்தர்கள்,மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர்(1) பீரீஸ்,மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர்(2)சமன் ஜெயசிங்க,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோ உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இடம் பெறும் குற்றச் செயல்கள்,சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு குறித்த சட்ட விரோத செயற்பாடுகள் மற்றும் குற்றச் செயல்களை தடுப்பது பற்றியும் ஆராயப்பட்டது.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இடம் பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து வருகை தந்தவர்களினால் மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபில்யு.எம்.எம்.விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

-இதன் போது மக்களின் பாதுகாப்புக்களை கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு பொலிஸ் றோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து இனம் தெரியாதவர்களின் நடமாட்டங்களை குறைப்பதாகவும் இவ்விடையங்களில் கிராம அலுவலகர்கள்,சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் விழிர்ப்புடன் செயற்படுமாறு மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபில்யு.எம்.எம்.விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். 









மன்னாரில் சிவில் பாதுகாப்பு குறித்து விசேட கலந்துரையாடல். Photos Reviewed by Admin on August 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.