அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாணவன் மொங்கோலியா பயணம்.Photos

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்கும் மாணவன் செபஸ்ரியாம் பிள்ளை தேவராஜா கிளின்ரன் என்ற மாணவன் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மொங்கோலியாவில் 19 வயதுக்குற்பட்ட பிரிவின் கீழ் இடம் பெறவுள்ள உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

-எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை மொங்கோலியாவில் குறித்த உதைப்பந்தாட்ட போட்டி இடம் பெறவுள்ளது.

-இந்த நிலையில் குறித்த மாணவன் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியில் தெரிவு செய்யப்பட்டு குறித்த போட்டியில் கலந்து கொள்ள மாங்கோலியா செல்லவுள்ளார்.

இவர் வடக்கு மண்ணில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மாணவன் என்ற வகையில் தனது பாடசாலைக்கும்,மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

-இவரின் விளையாட்டுத்திறனை பாராட்டி கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களினால் வெளிநாட்டுப்பயணத்திற்காக வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை வடமாகாண ஏற்றுமதி அபிவிருத்தி உதவிப்பணிப்பாளர் முஜீப் ரகுமான்,மன்னார் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன்,அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கிங்லி சிறிகாந்தன் ஆகியோர் இணைந்து நேற்று(26)புதன் கிழமை வைபவ ரீதியாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 


மன்னார் மாணவன் மொங்கோலியா பயணம்.Photos Reviewed by Admin on August 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.