அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் மன்னாரில் கண்ணீர் மல்க அனுஸ்ரிப்பு.Photos

காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கையில் இடம் பெற்று வரும் உள்ளக விசாரனைகளில் எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும்,இவ்விடையங்கள் தொடர்பில் சர்வதேச விசாரனைககள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இதற்கு அனைத்து தரப்பினரும் சர்வதேசத்திற்கு அலுத்தத்தைக்கொடுக்க வேண்டும் என காணாமற்போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மன்னாரில் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது. மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள டிலாசார் இல்லத்தில் காலை 10 மணி முதல் 1 மணிவரை குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

வட கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சங்கம், மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்த குறித்த நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் தலைமையில் இடம் பெற்றது.

-இதன் போதே கலந்து கொண்ட வட கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் உறவினர்கள் அவ்வாறு தெரிவித்தனர்.

பல நூற்றுக்கணக்கான உறவினர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு காணாமல் போன தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

இதன் போது பல உறவுகள் காணாமல் போன தமது உறவுகளை நினைத்து வாய் விட்டு சத்தம் போட்டு கத்திய சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

-இந்த நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிய நிலையில் தொடர்ச்சியாக அங்கு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு இருதி யுத்தத்தில் தமிழ் மக்கள் எதிர் கொண்டு பல பிரச்சினைகள் நாடகமாக அறங்கேற்றப்பட்டது.

அத்துடன் நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினரான தமிழ் சிவில் சமூக அமைப்பின் இணைப்போச்சாளர், அருட்பணி. எழில் இராஜேந்திரம் கலந்து கொண்டார்.

-கௌர விருந்தினர்களாக அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா உற்பட வட கிழக்கு மாகாணங்களில் உள்ள காணமால் ஆக்கபட்டவர்களின் உறவுகள்,மதத்தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள்,பொது நிலையினர் என பலர் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை உணர்வுபூர்வமாக நினைவு கூறியமை குறிப்பிடத்தக்கது.









காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் மன்னாரில் கண்ணீர் மல்க அனுஸ்ரிப்பு.Photos Reviewed by Admin on August 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.