புலம்பெயர் ஒன்றியம் விடத்தல்தீவு ( IUV ) உதயமாகி முதலாவது வருட நிறைவு விழா-Photos
புலம்பெயர் ஒன்றியம் விடத்தல்தீவு ( IUV ) ஆரம்பிக்கப்பட்டு முதலாம் வருட நிறைவு தினத்தை முன்னிட்டு ( 29 - 09 - 2014 தொடக்கம் 28 - 09 - 2015 வரை ) எமது ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 28- 08 - 2015 வியாழக்கிழமை நேற்றய தினம் மாலை 03 ; 00 மணியளவில்
மன் / புனித ஜோசெப்வாஸ் மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் மேற்படி விழா நிகழ்வு நடைபெற்றது .
மேலும் இவ் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது கிராமத்தின் பங்குத்தந்தை அருட்பணி செல்வநாதன் பீரிஸ் அடிகளாரும் ,சிறப்பு விருந்தினர்களாக எமது பங்கின் அருட்சகோதரிகளும் மற்றும் எமது பாடசாலையின் ஆசிரியர் திருமதி சர்வானந்தன் ஆன்றோஸ் சுஜி அவர்களும், திரு.நிர்மலதாசனின் சகோதரிகள் ,உறவினர்கள் , ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
.இவ் நிகழ்வில் தலைமை உரையினை ஆசிரியை செல்வி .டெலானி .டொமினிக் நிகழ்த்தினார் .அதனைத்தொடர்ந்து எமது பங்குத்தந்தையினால் ஆசியுரையும் ,பிரதம விருந்தினர் உறையும் நிகழ்த்தப்பட்டது, அதனைத்தொடர்ந்து எமது பங்கின் அருட்சகோதரியினால் ,சிறப்பு விருந்தினர் உரையும் இடம்பெற்றது,
இவ் நிகழ்விற்கு சான்றிதல்களை பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
.
இவ் நிகழ்வில் ,எமது புலம்பெயர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் அமலமரித்தியாகிகள் சபையின் மூலமாக மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட ஆங்கில பாடநெறிக்கான ( ELOCUTION ) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் மற்றும் எமது புலம்பெயர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட முதலாம் வருட நிறைவை முன்னிட்டும் சித்தியடைந்த மாணவர்களுக்கான அன்பளிப்பு பரிசாக மறைந்த திரு .திருமதி .ஜேசுதாசன் அவர்களின் ஞாபகார்த்த பாடசாலை புத்தகபைகளும் அவர்களுடைய மகன் திரு.திருமதி. நிர்மலதாசன் அவர்களினால் அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டது .
தகவல்.
ஜேம்ஸ் .சுதாகரன் .
மெடான் .இந்தோனேசியா .
புலம்பெயர் ஒன்றியம் விடத்தல்தீவு ( IUV ) உதயமாகி முதலாவது வருட நிறைவு
விழா-Photos
Reviewed by Admin
on
August 30, 2015
Rating:

No comments:
Post a Comment