மன்னாரில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்ச்சைக்கூறிய கிணறு தோண்டும் பணி இன்று மாலை ஆரம்பம். Photos
Tமன்னார்,மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கிணற்றில் இன்று வெள்ளிக்கிழமை(28) அகழ்வுப் பணிகள் இடம் பெறவுள்ளது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா கடந்த புதன் கிழமை மாலை குறித்த மனித புதை குழி காணப்பட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டதோடு நிள அளவையாளர் திணைக்கள அதிகாரிகளின் உதவியோடு கிணற்றையும் அடையாளம் கண்டனர்.
இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைய கிணற்றை அண்மித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை(27) துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
-அதே வேளை அப்பகுதியில் காணப்படும் தடயங்கள் அழிவடையாத வகையில் புதைகுழி அமைந்துள்ள பகுதியூடான வீதியை மனித நடமாட்டமற்ற பகுதியாக பிரகடனப்படுத்தி, பாதுகாப்பை பலப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைவாக போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(28) மன்னார் நீதிமன்றத்தின் அம்hவுகள் முடிவடைந்த நிலையில் மாலை 3 மணியளவில் மன்னார் நீதவானின் முன்னிலையில் குறித்த மனித புதை குழி காணப்பட்ட பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட சர்ச்சைக்கூறிய கிணறு தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்ச்சைக்கூறிய கிணறு தோண்டும்
பணி இன்று மாலை ஆரம்பம். Photos
Reviewed by Admin
on
August 28, 2015
Rating:

No comments:
Post a Comment