வரவு - செலவுத் திட்ட வெளிப்படைத் தன்மை...
புதிய அரசாங்கம் தெரிவானமை இலங்கைக்கு அதன் நிறுவனங்களின் செயற்பாடுகளில் நிலவிய சில கடந்தகாலத் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான புதியதொரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.
தற்போது இருக்கின்ற பிரச்சினைகளுள் பெரும்பாலானவை பொது நிதியின் உரிய முகாமைத்துவத்தோடு தொடர்புபட்டவை என்பதோடு வரவு - செலவுத் திட்டநடைமுறையில் நிலவும் குறைபாடோடும் தொடர்பு பட்டுள்ளன என வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நாட்டின் பிரஜைகள் நிதி முகாமைத்துவ விவகாரங்களை மதிப்பீடு செய்யக்கூடியதாக இருப்பது ஜனநாயக ஆட்சி முறையின் முக்கியமானதொரு அம்சமாகும்.
எனினும், இந்த இயலுமையானது, செய்வதற்கென முன்மொழியப்பட் டவை மற்றும் அமுல்படுத்தப்பட்டவை என்ற ரீதியிலான வரவு -செலவுத் திட்டம் மீதான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பின் அளவிலேயே தங்கியுள்ளது.
உலகளாவிய ரீதியில் இது வரவு - செலவுத் திட்ட வெளிப்படைத் தன்மை என அறியப்படுவதோடு, ஆகக் கூடிய 100 புள்ளிகள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாடும் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் அவற்றை தரவரிசைப்படுத்தும் திறந்த வரவு - செலவுத் திட்ட ஆய்வு மூலம் மதிப்பிடுகின்றது.
இந்த திறந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடானது (OBS), வரவு செலவு திட்டத்துடன் தொடர்புடைய ஆவணங்களை அடிப்படையாக கொண்டமைந்தது என்பதோடு, அது வரவு செலவுத் திட்ட வெளிப்படைத் தன்மையின் மூன்று அம்சங்களையும் பரிசோதிக்கின்றது.
வெளிப்படுத்துதல், மேற்பார்வை மற்றும் பங்குபற்றல். அதாவது: (1) வரவு செலவுத் திட்ட ஆவணங்களில் உள்ள வெளிப்படுத்தல்களின் அளவு (2) சட்டவாக்கச்சபை மற்றும் கணக்காய்வாளர் திணைக்களம் ஆகியவற்றினால் வரவு - செலவுத் திட்டம் மேற்பார்வை செய்யப்படுதல் மற்றும் (3) வரவு செலவுத் திட்ட நடைமுறையில் பொது மக்களின் பங்கேற்பு என்பவையாகும்.
வரவு - செலவுத் திட்ட வெளிப்படைத் தன்மை...
Reviewed by Author
on
September 15, 2015
Rating:

No comments:
Post a Comment