உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்பத் சேமிப்பு சித்திர போட்டி...
எதிர்காலத்தில் தேசத்துக்கு சிறந்த தலைவர்களை உருவாக்கும் நோக்குடன், உலக சிறுவர் தினத்தைமுன்னிட்டு சம்பத் வங்கி சம்பத் 'சேமிப்பு சித்திரம்' எனும் விசேட போட்டியை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசேட போட்டி 2015 செப்டெம்பர் 04 ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான நான்கு வாரங்களுக்கு இடம்பெறுகின்றது.
இந்த போட்டியில் பங்குபற்றும் சிறுவர்கள், சேமிப்பு / விரயத்தை தவிர்ப்பது பற்றிய தமது ஆக்கபூர்வமான சிந்தனைகளை ஓவியமாக வரைந்து சமர்ப்பிக்க வேண்டும். அல்லது தமது புத்தாக்கமான சேமிப்பு முறையை புகைப்படமாக எடுத்து சமர்ப்பிக்கலாம். நீர், மின்சாரம், மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பொரு ட்கள் அல்லது பழைய ஆடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்றன இதில் உள்ளடங்கியிருக்கலாம்.
இந்த பிரத்தியேகமான போட்டியின் மூலமாக மாணவர்களுக்கு புத்தாக்கமான சிந்தனைகளை வெளிக்கொணர முடியும். அத்துடன், வளங்களை பயனுள்ள வகையில் சேமித்துக் கொள்ள முடியும் என்பதுடன், அவற்றை கழிவாக அகற்றுவதையும் தவிர்த்துக் கொள்ள முடியும். ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை அருகிலுள்ள சம்பத் வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க முடியும் அல்லது அவற்றை சம்பத் சேமிப்பு சித்திரம், சம்பத் வங்கி பிஎல்சி, சந்தைப்படுத்தல் பிரிவு, இல. 110, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொழும்பு - 02 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
இதன் மூலம் மாணவர்களுக்கு தமது சிந்தனைகளை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், எல்லைகளற்ற வகையில் சிந்திக்கவும் முடியும். பங்குபற்றுநர்கள் அவர்களின் புத்தாக்கத்திறன் வெளிப்பாடு அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவார்கள் என்பதுடன், 100 பேர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டு, 5000 ரூபாய் பெறுமதியான பணப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். அத்துடன், வெற்றியாளர்கள் வளங்களை பாதுகாப்பதற்காக ஊக்குவிக்கப்படுவார்கள்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்பத் சேமிப்பு சித்திர போட்டி...
Reviewed by Author
on
September 15, 2015
Rating:

No comments:
Post a Comment