ஐ.நா.வின் விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கின்றது, நாளை மறுதினம் அறிக்கை பகிரங்கம்: மனித உரிமை ஆணையாளர்...
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விவகாரம் தொடர்பான ஐ.நா.வின் விசாரணை அறிக்கை நாளை மறுதினம் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் இந்த அறிக்கை தமக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் {ஹசேன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமானது. இந்த கூட்டத் தொடரின் முதலாவது அமர்வை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தீவிரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புக்களை எதிர்கொண்டோம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சியின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டில் நல்லிணக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் இலங்கை ஐ.நா. சபைக்கு பொறுப்பு கூறும் விசாரணை அவசியமாகும்.
அறிக்கையை பாரக்கும் போது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. மேலும் என்னுடைய பரிந்துரைகள் உட்பட, மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தினால் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட விரிவான விசாரணை அறிக்கையினை எதிர்வரும் புதன்கிழமையன்று வழங்குவேன். அதன் முடிவுகள் மிகவும் தீவிர தன்மையிலானவைகளாக இருக்கும்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கம் மற்றும் அவரது தலைமையின் கீழ் புதிய அரசு மேற்கொண்டுவரும் கடமைகளையும் நான் வரவேற்கின்றேன்.
ஆனால் இந்த சபை இலங்கையர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. முடிவுகளின் பொறுப்புக்கூறல் செயல்முறையினை உறுதி செய்வது குறித்து சொந்த நம்பகத்தன்மையை கொண்டுள்ளது.
இன்றைய கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கிழக்கு மாகாண ஆளுனர் உட்பட பலர் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா.வின் விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கின்றது, நாளை மறுதினம் அறிக்கை பகிரங்கம்: மனித உரிமை ஆணையாளர்...
Reviewed by Author
on
September 14, 2015
Rating:

No comments:
Post a Comment