ஸ்கொஸ் விளையாட்டில் இலங்கைக்கு வெண்கல பதக்கம்...
இளைஞர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
14 தொடக்கம் 18 வயதுடைய இளைஞர்கள் பங்குபற்றும் இப்போட்டிகள், பசுபிக் தீவுகளில் ஒன்றான சமோஆவில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற ஸ்கொஸ் விளையாட்டில் இலங்கை சார்பாக பங்குபற்றிய மிஹிலியா மெத்சரணிக்கு இப்பதக்கம் கிடைத்துள்ளது.
கொழும்பு சிறிமாவோ பாலிகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர் இலங்கை சார்பாக பங்குபற்றிய குழுவின் தலைவருமாவார் என்பது குறிப்பிடத் தக்கது.
இம்மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்த இவ்விளையாட்டுகள் எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்கொஸ் விளையாட்டில் இலங்கைக்கு வெண்கல பதக்கம்...
Reviewed by Author
on
September 08, 2015
Rating:

No comments:
Post a Comment