சம்பந்தனை மகாநாயக்கர் வரவேற்பு,,,
பிரிவினைவாதத்தை கைவிட்டுவிட்டு தேசிய ரீதியாக செயலாற்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என மல்வத்த விஹாரையின் பீடாதிபதி திப்பட்டு வாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்தார்.
நேற்று (10) காலை மல்வத்த விஹாரையில் பீடாதிபதிக்கும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக் கையிலேயே பீடாதிபதி சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
பீடாதிபதி அங்கு தொடர்ந்து உரையாற் றுகையில் கூறியதாவது,
ஒரு சில குறுகிய அரசியல் வாதிகள் நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தையும் ஐக்கியத்தினையும் சீர்குலைப்பவர்களாக இருந்து வருகின்றனர். இன்றைய நல்லாட்சியில் நாட்டு மக்கள் அனைவரும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் மற்றும் புரிந்துணர்வு டனும் வாழ்ந்து வருகின்றனர்.
கிராமங்கள் மற்றும் தோட்டங்களில் மக்கள் சமாதானத்துடன் வாழ்வதுடன் ஏன் கலப்பு திருணங்கள் கூட மிகவும் அழகான முறையில் இடம்பெற்ற வருகின்றன.
இதன் பின்னர் அவர்கள் சிறப்பாக வாழ்க்கையை முன்னெடுத்து வருகின் றனர்.
இது மேலும் மேலும் தழைத்தோங்க எனது நல்லாட்சிகள் எனவும் பீடாதிபதி மேலும் வாழ்த்துத் தெரிவித்தார். .
சம்பந்தனை மகாநாயக்கர் வரவேற்பு,,,
Reviewed by Author
on
September 11, 2015
Rating:

No comments:
Post a Comment