அண்மைய செய்திகள்

recent
-

யாழ் வைத்தியசாலை தீ விபத்து - விசாரணை தொடர்பில் விளக்கம்

 யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். 


அந்த விசாரணையின் அடிப்படையிலான முன்னேற்றம் விரைவில் கிடைக்கப்பெறும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். 

யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில், அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (10) பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்து அபாயகரமானதாகும். 

குறிப்பாக மருந்துகள் தொடர்பான விபரங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படுகின்றபோது இந்த சம்பவம் பதிவானமை, மிகவும் அபாயம் மற்றும் சந்தேகத்திற்குரியதாக பார்க்கப்படுகின்றது. 

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் குறித்த சந்தர்ப்பத்திலேயே சுகாதார அமைச்சுக்கு முறைப்பாட்டை வழங்கியிருந்தார். 

இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறும் அப்போதே பணிக்கப்பட்டது. 

விரைவில் அந்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்




யாழ் வைத்தியசாலை தீ விபத்து - விசாரணை தொடர்பில் விளக்கம் Reviewed by Vijithan on June 10, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.