நாடாளுமன்றம் அங்கீகரித்தால் மரணதண்டனை - ஜனாதிபதி...
குரூரமான குற்றங்களை புரிவோருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்குமாயின், அதனை அமுல்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (18) காலியில் இடம்பெற்ற போதைத் தடுப்பு செயலமர்வின் இரண்டாவது அமர்வின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும் மரணதண்டனை குறித்தான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
கொட்டதெனியாவ சிறுமி மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதனை அடுத்து, மரண தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் வேண்டுகோள்கள் வந்ததாக அவர் தெரிவித்தார்.
முன்னேற்றமடைந்த பல்வேறு நாடுகளிலும் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மதுபானம், சிகரட் உள்ளிட்ட போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழித்து இலங்கையை போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடாக மாற்றும் பொருட்டு ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட போதைத்தடுப்பு செயற்திட்ட ஜனாதிபதி செயலணியினாலேயே இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நாட்டில் போதையை முற்றாக ஒழிப்பதன் மூலம் சமூக பொருளாதார கலாச்சார அபிவிருத்திகளை மேற்கொண்டு நாட்டின் ஸ்திரத்தன்மையினை பேண முடியும் என்பது இச்செயலணியின் நோக்காகும்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், 426 பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்த 150 பாடசாலை மாணவர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றம் அங்கீகரித்தால் மரணதண்டனை - ஜனாதிபதி...
Reviewed by Author
on
September 18, 2015
Rating:
Reviewed by Author
on
September 18, 2015
Rating:


No comments:
Post a Comment