நிரந்தர தீர்வைக் காணுவதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன : சம்பந்தன்...
நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுத் தரவும் அந்த தீர்வை முழுமையாக அமுல்படுத்தும் வரையிலும் சர்வதேசம் எமக்கு சாதகமாகவும் மேற்பார்வை செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமென சர்வதேசத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நாட்டினுடைய தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக்காணுவதற்கு ஆக்கபூர்வமான முறையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
நிலாவெளி பெரிய குளம் திருக்கோணேஸ்வர வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சர்வதேசம் எமக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால் தான் மூன்று தினங்களுக்குமுன் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் வெளியிட்ட அறிக்கை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு சாதகமாகவும் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் உண்மை நிலைகளை உலகத்துக்கு வெளிக்கொண்டுவரும் அறிக்கையாகவும் வெளிவந்துள்ளது. சர்வதேசம் சாதகமாக இருந்திருக்காவிட்டால் இந்நிலைமை ஏற்பட்டிருக்க முடியாது.
சர்வதேசத்தின் சாதக நிலையென்பது அறிக்கையில் மட்டும் தங்கியிருக்கவில்லை. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பரிகாரம் காணும் வகையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தரவும் வேண்டும். அந்த நிரந்தர தீர்வை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் காலம்வரை முழுமையான மேற்பார்வையாளர்களாகவும் அவர்கள் விளங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்பொழுது நாட்டினுடைய தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக்காணுவதற்கு ஆக்கபூர்வமான முறையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப்பயணத்தில் நாம் நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் அது அவசியம். சகல மக்களையும் இணைத்து கொள்வதன் மூலம் தான் எமது நியாயங்களை அவர்களுக்கு ஞாயப்படுத்தி நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
நிரந்தர தீர்வைக் காணுவதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன : சம்பந்தன்...
Reviewed by Author
on
September 18, 2015
Rating:
Reviewed by Author
on
September 18, 2015
Rating:


No comments:
Post a Comment