ஐ.நாவின் அறிக்கைக்கு அங்கத்துவ நாடுகள் முழு ஆதரவை வழங்க வேண்டும்: பா.உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன்
இலங்கை தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கைக்கு ஐ.நாவில் அங்கம் வகிக்கின்ற நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா மன்றத்தின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்ற விசாரணைகள் மூலமாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கபட்டுள்ளது.
இந்த அறிக்கையில் சமர்ப்பிக்கபட்ட கலப்பு நீதிமன்றம் தொடர்பான விடயங்கள் உள்ளது.
இது எந்த அளவிற்கு நம்பகத்தன்மையுடைய செயற்பாடுகளாக இருக்கும் என்று விசாரணை நடைபெறகின்றபோதுதான் தெரியவரும்.
ஆனால் தற்பொழுது இப்படியான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதை நான் வரவேற்கிறேன்.
இதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் ஒத்துழைக்க வேண்டும்.
குறிப்பாக இந்த அறிக்கைக்கு சரியான முறையில் எவ்வாறு ஆதரவு அழிப்பார்கள், சரியாக முறையில் விசாரணை நடைபெற ஒத்துழைப்பார்களா? என்பது எமக்கு சந்தேகம்தான்.
ஆனாலும் இந்த அரசாங்கம் நல்லாட்சியில் ஜனநாயக ரீதியில் உண்மையை கண்டறிவதற்கு சிறப்பாக அணுகுவதாக சொல்லியிருககிறார்கள்.
குறிப்பாக ஐ.நாவின் அறிக்கையினை அடுத்து இந்த அரசாங்கம் நம்பிக்கைமிக்க சில வரிகளை குறிப்பிட்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் இந்த அரசாங்கம் இந்த அறிக்கைக்கு முற்றுமுழுவதுமாக ஆதரவு வழங்கி அதனை நடைமுறைபடுத்த வேண்டும்.
அதேபோன்று இந்தியாவும் எமது தமிழ் மக்களுக்கு இழைக்கபட்ட அநீதி தொடர்பாக தொடர்ந்தும் மௌனம் காட்டாது, அறிக்கை தொடர்பாக முன்னேற்பாடாக வட கிழக்கு இணைந்த தாயகத்தில் அரசியல் தீர்வு ஒன்றை பெற்று கொடுப்பதற்கும்,
எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒரு நியாயமான தண்டனை வழங்குவதற்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.
குறிப்பாக ஐ.நாவில் அங்கம் வகிக்கின்ற நாடுகள் இந்த அறிக்கைக்கு ஆதரவை வழங்கவேண்டும் என்றும் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் இந்த கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.
இந்த அறிக்கையின் மூலம் இலங்கையில் என்ன நடந்தது எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையாக இந்த அறிக்கையின் தீர்மானம் அமைய வேண்டும் என்றார்.
ஐ.நாவின் அறிக்கைக்கு அங்கத்துவ நாடுகள் முழு ஆதரவை வழங்க வேண்டும்: பா.உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன்
Reviewed by NEWMANNAR
on
September 18, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 18, 2015
Rating:

No comments:
Post a Comment