பிரதி எதிர்க்கட்சித் தலைவராக மாவை சேனாதிராஜா...
எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத சந்தர்ப்பங்களில், அவரது பணியை தொடரும் வகையில் பிரதி எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவதற்கு மாவை சேனாதிராஜா எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்விடயத்தை தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் பாராளுமன்றத்தில் இல்லாத சந்தர்ப்பங்களிலும் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பங்களிலும் மாவை சேனாதிராஜா எம்.பி, அவரது பணிகளை மேற்கொள்வார் என அவர் இதன்போது தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதி எதிர்க்கட்சித் தலைவராக மாவை சேனாதிராஜா...
Reviewed by Author
on
September 07, 2015
Rating:

No comments:
Post a Comment