தொலைக்காட்சி, இணையம், கணினி விளையாட்டு : மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிப்பதாக ஆய்வு...
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக தொலைக்காட்சியில் அல்லது இணையத்தில் நேரத்தை செலவிடுதல் அல்லது கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுதல் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை பாதிப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு கூறுகின்றது.
ஆய்வு முடிவுகளின் படி,
தினசரி ஒரு மணி நேரம் கூடுதலாக கணினி அல்லது தொலைக்காட்சித் திரைகளை பார்க்கும் மாணவர்கள் அவர்களது தேர்வுகளில் குறைவான புள்ளிகள் பெறுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
ஒரு மணி நேரம் படிப்பு தொடர்பான வீட்டுவேலை (ஹோம்வேர்க்) அல்லது வாசித்தலில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்ச்சி அதை செய்யாத அவர்களது சக மாணவர்களின் தேர்ச்சியைவிட அதிகமாக இருக்கின்றது.
விளையாட்டு போன்ற உடல்ரீதியான நடவடிக்கைகள் அவர்களது கல்விச் செயல்பாட்டில் எந்த ஒரு தாக்கத்தையும் காட்டவில்லை.
ஆனால் அதிக நேரம் படிக்கும் மாணவர்கள், இணையம் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றிலும் அதிக நேரம் செலவழித்தால், அப்போதும் அவர்களது தேர்வு மதிப்பெண்கள் குறைகின்றன என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இது போன்ற ஒளித்திரைகளில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது அவர்களுக்கு முக்கிய பலன்களைத் தரக்கூடும் என இந்த ஆய்வு முடிவுகளை எழுதியவர்களில் ஒருவரான டாக்டர் எஸ்தர் வான் ஸ்லுயிஜ்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த முடிவுகளை மேலும் திட்டவட்டமாக உறுதிசெய்ய மேலும் கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று கூறும் மற்றொரு ஆய்வாளர் டாக்டர் கிற்ஸ்டின் கோர்டர், தேர்ச்சி முடிவுகள் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள்கள் ஒளித்திரை கருவிகளில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது குறித்து பரீசிலிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொலைக்காட்சி, இணையம், கணினி விளையாட்டு : மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிப்பதாக ஆய்வு...
Reviewed by Author
on
September 07, 2015
Rating:

No comments:
Post a Comment