மன்னாரில் கவிதை நூல் வெளியீட்டு விழா சுள்ளி கோர்த்த கூடு 24-09-2015

மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் பழைய மாணவன் இ.கனிஸ்ரன் அவர்களின் முதலாவது கவிதை சுள்ளி கோர்த்த கூடு நூல் வெளியீட்டு விழா 24-09-2015 வியாழக்கிழமை நகர மண்டபத்தில் நடைபெற்றது….
இந்நிகழ்வில் சிறப்புரையினை அருட்சகோதரர் Nஐ.ஸ்ரனிஸ்லோஸ் அவர்களும் நூல்வெளியீட்டுரையை வி.எஸ்.சிவகரன் அவர்களும் வாழ்த்துரையை அருட்தந்தை சார்லஸ் தயாளன் அவர்களும் பிரதமர் விருந்தினர் உரையினை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இருதயநாதன் சாள்ஸ் அவர்களும் நிகழ்த்தியதோடு நன்றியுரையினை நூலாசிரியர் இ.கனிஸ்ரன் நிகழ்த்தினார்.
இவரது முதலாவது படைப்பான சுள்ளி கோர்த்த கூடு கவிதை நூலானது 15 தலைப்புகளில் தான் கண்டுணர்ந்த வாழ்வின் பக்கங்களை படிப்பினைகளை பசுமையான எண்ணங்களையும் சுவைபடத்தந்துள்ளார் வண்;ணமயமான அட்டைப்படமும் ஓவியங்களும் அழகாக அதற்கேர்த கவிதைகளாக காணப்படுகின்றது சிறப்பானது அருட்சகோதரர் Nஐ.ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் ஆசிச்செய்தியும் க.கருணாகரன் அவர்களின் அணிந்துரையும் யோ.மனோராஐ; அவர்களின் வாழ்த்துப்பாவும் மேலும் இக்கவிதைத்தொகுப்புக்கு சிறப்பினை தருகிறது.
இவரது கலைப்பயணம் தொடர மக்களின் மனம் கவர்ந்த நியூ மன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது….
மன்னாரில் கவிதை நூல் வெளியீட்டு விழா சுள்ளி கோர்த்த கூடு 24-09-2015
Reviewed by Author
on
October 02, 2015
Rating:
Reviewed by Author
on
October 02, 2015
Rating:



No comments:
Post a Comment