புத்தளத்தில் காணாமல்போன சிறுமி கற்குகையிலிருந்து மீட்பு ...
புத்தளம் - கருவலகஸ்வெவ பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுமியை அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் பிரதேச மக்களின் உதவியோடு சுமார் 12 மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், சிறுமியை கற்குகையில் இருந்து மீட்டுள்ளனர்.
புத்தளம் - கருவலகஸ்வெவ பஹரிய பகுதியைச் சேர்ந்த தினிதி அசன்ஸா என்ற சிறுமியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன் தினம் (29) மாலை 4.00 அளவில் குறித்த சிறுமி, தாய் உணவு சமைக்கும் போது வெளியே வந்து சிறிதுநேரத்தின் பின்னர் திடீரென காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து பிரதேச மக்களின் உதவியோடு இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று காலை வீட்டியிலிருந்து சுமார் 13 கிலோ மீற்றருக்கு அப்பால் அடர்ந்த காட்டிலுள்ள கல்குகையில் இருந்து மீட்டுள்ளனர்.
இதுவரை குறித்த சிறுமி எவ்வாறு அடர்ந்த காடுக்கு சென்றாள் என எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் குறித்த சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ரிஐவே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்தில் காணாமல்போன சிறுமி கற்குகையிலிருந்து மீட்பு ...
Reviewed by Author
on
October 01, 2015
Rating:
Reviewed by Author
on
October 01, 2015
Rating:


No comments:
Post a Comment