ரஷ்ய ஜனாதிபதியின் உருவப்படத்தை மார்பகங்களை பயன்படுத்தி வரைந்த பெண் ஓவியக் கலைஞர்...
ரஷ்ய ஓவியக் கலைஞர் ஒருவர் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்க்க விநோத வழிமுறையொன்றைக் கையாண்டு ஓவியத்தை வரைந்துள்ளார்.
சென் பீற்றர்ஸ்பேர்க் நகரைச் சேர்ந்த ஐரினா ரொமொனோ என்ற மேற்படி பெண் ஓவியக் கலைஞர் தனது மார்பகங்களைப் பயன்படுத்தி நீல நிற வர்ணத்தால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உருவப் படத்தை வரைந்துள்ளார்.
சமூகத்தில் ஓவியர்களின் வகிபாகம் குறித்து அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு விநோத வழிமுறையைக் கையாண்டு ஓவியங்களை வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஐரினா தெரிவித்தார்.
"ஓவியர்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் எவரும் கவனம் செலுத்துவதாக தெரியாததால் அவர்களது கவனத்தை எவ்வாறு ஈர்ப்பது என நான் சிந்தித்தேன். அவர்களது கவனத்தை ஓவியர்களின் பக்கம் ஈர்ப்பதன் மூலமே அவர்களது உதவியை ஓவியர்கள் பெறுவது சாத்தியமாகும்" என அவர் மேலும் கூறினார்.
ரஷ்ய ஜனாதிபதியின் உருவப்படத்தை மார்பகங்களை பயன்படுத்தி வரைந்த பெண் ஓவியக் கலைஞர்...
Reviewed by Author
on
October 02, 2015
Rating:
Reviewed by Author
on
October 02, 2015
Rating:


No comments:
Post a Comment