ஐ.சி.சி. தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இலங்கை அணி,,,
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
நேற்று முன்தினம் ஐ.சி.சி. ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் 103 புள்ளிகளுடன் இலங்கை அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 127 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா இருக்கிறது.
இந்தியா 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தில் 110 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணியும், 109 புள்ளிகளுடன் நியூஸிலாந்து நான்காவது இடத்திலும் உள்ளன.
அண்மையில் பாகிஸ்தான் அணியுடனான தொடரில் இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்தது. இந்த தோல்வி தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி முன்னேற தடையாக அமைந்துள்ளது.
அதேபோல் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி 96 புள்ளிகளுடன் பங்களாதேஷ் அணி 7 ஆவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் 90 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து 100 புள்ளிகளுடன் இலங்கைக்கு அடுத்தபடியாக 6ஆவது இடத்தில் உள்ளது.
ஐ.சி.சி. தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இலங்கை அணி,,,
Reviewed by Author
on
October 02, 2015
Rating:
Reviewed by Author
on
October 02, 2015
Rating:


No comments:
Post a Comment