மாகாண முதலமைச்சர்களும் அமைச்சரவையில் பங்கேற்பர் : ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்...

மாகாண சபைகளின் முதலமைச்சர்களை யும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரி்பால சிறிசேன கொண்டு வந்த இந்த தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
தகுதியற்றவர்கள் இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பயன்படுத்துவதனை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகை யில்,
மாகாண சபைகளின் விடயங்களை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் விசேட தீர்மானம் ஒன்றை எடுத்தோம். அதாவது மாகாண சபைகளின் முதலமைச் சர்களையும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரி்பால சிறிசேன கொண்டு வந்த இந்த தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அந்தவகையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாகாண முதலமைச்சர்களும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
மேலும் பாராளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள ஆலோசனைக் குழுக்களின் தலைவர்களையும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள செய்யவுள்ளோம்.
மேலும் தற்போது நாட்டில் இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகின்றது. தகுதியற்றவர்கள் பலர் இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பயன்படுத்துவது குறித்து குற் றம் சுமத்தப்படுகின்றது. எனவே தகுதியற்றவர்கள் இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பயன்படுத்துவதனை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் மட்டும் இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அரசியல் ரீதியில் அநாதைகளாகியுள்ள சிலர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என ஒன்றை உருவாக்கிக்கொண்டு அரசாங்கம் ஜெனிவா பிரேரணை விடயத்தில் ஏதோவொன்றை மறைப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜெனிவா விடயத்தில் அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை. இந்த பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னரேயே விவாதம் நடத்தியிருக்கலாம். ஆனால் பிரதமர் ஜப்பான் சென்றிருந்தமையின் காரணமாக அதனை வழங்க முடியாமல் போனது. எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
எனவே அரசியல் ரீதியில் அநாதைகளாகியுள்ள சிலர் வங்குரோத்து அரசியல் செய்து நாட்டை குழப்ப முற்படக்கூடாது என்று கூறுகின்றோம்.
கேள்வி: ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மறுத்துள்ளாரே?
பதில்: அது தொடர்பில் நான் தேடிப் பார்த்துவிட்டே கூற முடியும்.
கேள்வி: தகவல் அறியும் சட்டமூலம் என்ன நிலையில் உள்ளது?
பதில்: தகவல் அறியும் சட்ட மூலத்தை மாகாண சபைகளுக்கும் அனுப்பி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது. எனவே தற்போது மாகாண சபைக ளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதனை பாராளுமன்றத்தில் நிறை வேற்று வோம் என்றார்.
மாகாண முதலமைச்சர்களும் அமைச்சரவையில் பங்கேற்பர் : ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்...
Reviewed by Author
on
October 18, 2015
Rating:

No comments:
Post a Comment