வணக்கம் உறவுகளே....இன்று 7 வது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையம்
வணக்கம் உறவுகளே....
எமது மன்னார் இணையம்(Newmannar.com) ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(25-10-2015)
6 ஆண்டுகள் பூர்த்தி அடைந்து 7 வது ஆண்டில் காலடி வைப்பது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .
எமது இணையம் மூலம் மக்கள் மன்னார் தகவல்களையும்,செய்திகளையும் உடனுக்குடன் அறிய எமது இணையம் பங்காற்றி வருகின்றது.
நாம் இந்த இணையத்தை ஆரம்பித்ததன் நோக்கம் உலகிலுள்ள தமிழ் பேசும் மக்கள் எமது மாவட்டத்தின் நிலைமைகளையும்,செய்திகளையும் அறிந்துகொள்வதற்காகவும் மேலும் மன்னார் மாவட்டத்துக்கென ஒருசெய்தி இணையமும் இல்லாத காரணத்தாலும் எமது மாவட்டம் பற்றிய தகவல்கள் மறைக்கப்படுவதாலும் அதை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துக்காவும் உதயமாகியது எம் இணையம்.
மன்னார் மாவட்டத்தில் நடை பெறும் சகல நிகழ்வுகளையும் எங்களால் இயன்ற அளவு தெரியப்படுத்துகின்றோம் . மேலும் இணையத்தின் பணிகள் மன்னார் மக்களிற்காக மட்டுமின்றி அனைத்து தமிழ்பேசும் மக்களிற்காக இன்னும் சிறந்த விருத்தியுடன் உங்களை வந்தடையும் என்பதை இவ்விடத்தில் அறியப்படுத்துகின்றோம்.
மன்னார் இணையச் செய்திகள் எந்த வகையிலும் பொய்யாகவோ,திரிவுபடுத்தியோ மக்களுக்கு தெரிவிக்கவிலை நாம் வெளியிடும் செய்திகள் அனைத்தும் உறுதிப்படுத்தியே வெளியிடுகின்றோம்.உண்மைக்கு மாறான அல்லது எம்மால் உறித்திப்படுத்த முடியாத செய்தியை நாம் வெளியிட விரும்பவில்லை, இதனால் தான் நாம் சில செய்திகளை தவிர்த்து வந்துள்ளோம் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
மன்னார் விம்பம் எனும் பகுதியினூடாக மன்னார் கலைஞர்களை இனம் கண்டு செவ்வி கண்டு பிரசுரித்து வருகின்றோம்.தொடர்ந்தும் விம்பம் பகுதியினூடாக கலைஞர்கள் மட்டுமன்றி மன்னார் மாவட்ட பாடசாலைகள்.மதவழிபாட்டு தலங்கள் மற்றும் மன்னாரில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள் என பல விடயங்களை வழங்க உள்ளோம். இம் முயற்சிக்கு தங்கள் சிரமத்தை பாராது நேரம் ஒதுக்கி செவ்வி வழங்கிய கலைஞர்களுக்கு எமது இணையத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம்.
எமக்கு செய்திகளை அனுப்பும் செய்தியாளர்களுக்கும் செய்திகளை அனுப்பும் வாசகர்களுக்கும் இணையத்தள நண்பர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். தொடந்து இணைந்து இருங்கள் ..
உண்மைகள் எப்போதும் உயிர் வாழும்..
வன்முறை மறுப்போம் அன்புநெறி வளர்ப்போம் !
நன்றி
வணக்கம்
மன்னார் இணைய குழுமம்
25.10.2015
வணக்கம் உறவுகளே....இன்று 7 வது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையம்
Reviewed by NEWMANNAR
on
October 25, 2015
Rating:

No comments:
Post a Comment