அண்மைய செய்திகள்

recent
-

யாழில் கரம் சுற்றுப்போட்டி...


யாழ். மாவட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டி நாளையும் நாளைமறுதினமும்  யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி அலகில் இடம்பெறவுள்ளது.

இச் சுற்றுப்போட்டியை யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அவையும் உடற்கல்வி அலகும் இணைந்து நடத்தவுள்ளன.

இப்போட்டிக்கு ஹரிகரன் பிறின்டேர்ஸ் அனுசரணை வழங்குகின்றனர்.
முதல்நாள் போட்டிகள் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும்.

இச் சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக மானிப்பாய் வலி தென்மேற்குப் பிரதேச சபை செயலாளரும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் கரம் பெண்கள் அணியின் தலைவியுமாகிய திருமதி. ஜெயந்தா சோமராஜ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்தப் போட்டிகளில் ஆறு  அணிகள் இரண்டு குழுக்களாக லீக் முறையில் மோதவுள்ளன.

இப் போட்டியில் குழு “ ஏ ”  யில் யாழ்.பல்கலைக்கழகம், கொக்குவில் கே.சி.சி, மானிப்பாய் விளையாட்டுக்கழக அணிகளுடன் , குழு “ பி” யில் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சியம்பாள் விளையாட்டுக் கழகம், யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி, யாழ். சென் .பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கரம் சுற்றுப்போட்டி... Reviewed by Author on October 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.