பார்வையிழந்தோரும் புகைப்படங்களை அறிய பேஸ்புக் வழங்கும் புதிய டூல்...
பல்வேறு தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் உலா வரும் பேஸ்புக்கில் பார்வையிழந்தோரும் படங்களைப் பற்றி அறியும் விதமாக புதிய டூலை பேஸ்புக் வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் தளத்தில் பார்வையிழந்த பொறியியலாளராக முதன்முதலாக பணிபுரிகின்ற மேட் கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார்.
இந்த செயற்கை நுண்ணறிவு டூலின் மூலம், புகைப்படத்தில் உள்ள முக்கிய விவரங்களை பார்வையிழந்தோர் தெரிந்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, ஒரு இயற்கைக் காட்சி கொண்ட புகைப்படத்தை இயற்கை, வானம் என இது அடையாளப்படுத்தும்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த புதிய டூல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பார்வையிழந்தோரும் புகைப்படங்களை அறிய பேஸ்புக் வழங்கும் புதிய டூல்...
Reviewed by Author
on
October 16, 2015
Rating:

No comments:
Post a Comment