யாழ்ப்பாணம் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் வகுப்பறை கட்டட திறப்பு விழா கடந்த 14ம் திகதி பாடசாலையின் அதிபர் பாலசிறீதரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து உரையாற்றினார்.
பல முக்கியமான தலைவர்களையும் கல்வியாளர்களையும் தந்துள்ள வழியாட்டியான மண். இதில் ஒரு கல்விச்சாலை தொழில்நுட்ப வளங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்று எமது அயல் நாடான இந்தியாவின் தமிழ் நாட்டில் கணணித்துறை அதிக வளர்ச்சி கண்டிருக்கின்றது. கணணி விற்பன்னர்கள் உருவாகி இருக்கின்றார்கள். இந்த நிலையில் எமது மாணவர்களும் கணணி மற்றும் தொழில்நுட்ப துறையில் தூரநோக்கோடு வளர்ச்சி அடையவேண்டிய சூழல் காணப்படுகின்றது தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பா.உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவயோகன் சுகிர்தன் விந்தன் வடக்கு மகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுதுறையின் முன்ளாள் செயலாளரும் தற்பொழுது வர்;த்தக மீன்பிடி போக்குவரத்துறை அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் சத்தியசீலன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் மற்றும் உயர் கல்வி அதிகாரிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment