யாழில் வயல் உழுத ஜனாதிபதி...
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நடைபெற்ற 'தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி ' திட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வயலில் இறங்கி இயந்திரத்தின் மூலம் நாற்றுக்களை நாட்டி வைத்தார்.
இன்றைய தினம் பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் என்ற எண்ணக் கருவின் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரணைமடுவிலிருந்து தொடக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
இலங்கை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இதுவே சிறந்த தருணம். இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்கும், போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கும், உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்குமாகவே இந்த வேலைத்திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கின்றோம் என்றார்.
யாழில் வயல் உழுத ஜனாதிபதி...
Reviewed by Author
on
October 05, 2015
Rating:
No comments:
Post a Comment