தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வார இறுதியில் வெளியிடப்பட உள்ளது
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வார இறுதியில் வெளியிடப்பட உள்ளது.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடாத்தப்பட்டது.
இறுதிப் பெறுபேறுகளை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பரீடசைத் திணைக்க ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதியில் பாடசாலைகளுக்கு பெறுபேறுகளை அனுப்பி வைக்க முடியும் எனவும் இணையத்திலும் பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வார இறுதியில் வெளியிடப்பட உள்ளது
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
October 05, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
October 05, 2015
 
        Rating: 


No comments:
Post a Comment