அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டம்...
ஐவர் திருமலை ஆஸ்பத்திரியில் அனுமதி
5ஆவது நாளாகவும் தங்களது உண்ணாவிதப் போராட்டத்தைத் தொடர்வதாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகளின் நிருவாக உறுப்பினர் எம். திலீபன் தெரிவித்தார்.
உண்ணாவிதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளில் சனி (03) மாலை 5 பேர் சுகயீனமுற்று திருகோணமலை ஆதார வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபை தங்களுக்கு எதுவிதமான உறுதியான பதிலையும் வழங்காத காரணத்தால் தீர்வு கிட்டும் வரை தொடர்ந்து நேற்று (04) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே இச்சம் பவம் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதும் உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இதனாலேயே இன்றும் தாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரி அமைப்பின் நிர்வாக உறுப்பினர் எம். திலீபன் மேலும் தெரிவித்தார்.
மேலும் மனிதாபிமானமுள்ள அனைத்து வேலையில்லாப் பட்ட தாரிகளையும் தங்களது போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டம்...
Reviewed by Author
on
October 05, 2015
Rating:

No comments:
Post a Comment