முள்ளிக்குளம் தொடக்கம் இரணை இலுப்பைக்குளம் வரையான வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பு.-Photos
மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இரணை இலுப்பைக்குளம் கிராமத்திற்குச் செல்லும் 10 கிலோமீட்டர் பிரதான வீதியை வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 2.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கும் பணிகளை சனிக்கிழமை வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்; உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள புனித தெரேசா ஆலயத் திருவிழா கடந்த சனிக்கிழமை இடம் பெற்றது.குறித்த திருவிழாவில் கலந்து கொண்ட நிலையில் அமைச்சர் குறித்த புனரமைப்பு பணியை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்விற்கு தட்சனா மருதமடு பங்குத்தந்தை, மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்திய சோதி , வீதி அபிவிருத்தி திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநாதன் , முள்ளிக்குளம் கிராம உத்தியோகத்தர் மற்றும் அங்குள்ள கிராம மட்ட அமைப்புக்கள் என்பன கலந்துகொண்டு குறித்த வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிக்குளம் தொடக்கம் இரணை இலுப்பைக்குளம் வரையான வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
October 12, 2015
Rating:

No comments:
Post a Comment