மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினரால் கலந்துரையாடல் நிகழ்வு -21-10-2015
மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினரால் புதிய அரசியல்மைப்பிற்கான அடிப்படை உரிமைகள் சமத்துவம் மனித மாண்பு அதிகாரப்பகிர்வு சட்ட சிக்கல்கள் போன்ற பலவிடையங்களில் மக்களின் அபிப்பிராயங்கள் ஆலோசனைகள் சீர்திருத்த கருத்துக்கள் மாற்று வழிச் சிந்தனைகளை கேட்டறிதலும் தெளிவு படுத்தலுமான கலந்துரையாடல் நிகழ்வு இன்று மாலை 2-00 மணியளவில் பெஜித் ரெஸ்ற் இன்ன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது...
இந்நிகழ்வில் மாற்றுக்கொள்கைகளுக்கான சிரேஸ்ர ஆய்வாளர் திரு. லயனல்குருகே தலைமையில் மற்றும் மாற்றுக்கொள்கை நியைத்தின் வடமாகாண இணைப்பாளர் திரு. சுரேஸ் மன்னார் மாற்றுக்கொள்கை நிலையத்தின் ஆலோசகர் மக்கள் காதர் மாவட்ட பயிற்றுவிப்பாளர் திரு. எ.எமில்றொமில்டன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்கலந்து கொண்ட மன்னார் மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஊடகவியலாளர்கள் சமயத்தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து பேசியபோது 60 வருடகாலத்தில் நாம் அனுபவித்த துன்பங்களுக்கு இதுவரை எந்தவிதமனா தீர்வும் இல்லை இனியும் கிடைக்கப்போவதில்லை எல்லாமே போலி நாடகம் தானென தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினரால் கலந்துரையாடல் நிகழ்வு -21-10-2015
Reviewed by Author
on
October 21, 2015
Rating:
No comments:
Post a Comment