மன்னார் பிரதேச கலாசாரப்பேரவை பெருமையுடன் நடாத்திய பிரதேச இலக்கிய விழா-2015
மன்னார் பிரதேச கலாசாரப்பேரவை பெருமையுடன் நடாத்திய
பிரதேச இலக்கிய விழா இன்று காலை 9-00மணியளவில் மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி(தேசிய பாடசாலை) முன்றலில் கிராமிய நடனங்களுடன் வரவேற்பு ஆரம்பமாகி விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டடனர்.
மங்கள இசையினை லயஞானநாதகலாசு10ரி வி.சிவபாலன் குழுவினர் வழங்க மங்கள விளக்கேற்றல் நிகழ்வில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர் தழிழ்தாய் வாத்தோடு வரவேற்பு நடனத்தினை கவின்கலாலயா நாட்டியப்பள்ளி மாணவிகள் வழங்க வரவேற்புரையினை மஹா.தர்மகுமார சர்மா வழங்க அரங்க சிறப்புரையினை வை.கஜேந்திரன் வழங்கவும் தலைமை உரையை பிரதேச கலாசார பேரவை தலைவர் கே.எஸ்.வசந்தகுமார் இவர்கள் நிகழ்த்தினார்…
சிறப்பு நிகழ்வுகளாக….
கதம்ப நடனம்-செல்வி- சி.அனுசியா அவர்களின் நடனக்குழுவினர்
கிராமிய நடனம்-பரதக்கலாலயா மன்றம்
சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம் செல்வி-ஆ.ஜீவிதா குழுவினர்
வாத்திய சங்கமம்
சிறப்பு பட்டிமன்றமாக…
இன்றைய ஊடகங்கள் சமூதாயத்தை நல்வழிப்படுத்துகின்றதா… இல்லையா… எனும் தலைப்பில் தமிழருவி வி.சிவகரன் அவர்களின் தலமையில் இரு அணிகளாக
மஹா.தர்மகுமார சர்மா அவர்களுடன் எஸ்.ஏ.உதயனும்
சோ.றோகன்ராஐ; எஸ்-சதீஸ் தமது வாதங்களை முன்வைத்துப்பேசினர்
இந்நிகழ்வின் உச்சமாக…
மன்னல்-2015 மலர் வெளியீடு இடம்பெற்றதோடு பிரதேச இலக்கிய விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதல்களும் பரிசில்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்…
இந்நிகழ்வின் அதிதிகளாக…
உயர் திரு.எம்.வை.எஸ்.தேசப்பிரிய -அரசாங்க அதிபர்
திருமதி-அ.ஸ்ரான்லி டிமெல் -மேலதிக அரசாங்க அதிபர்
உயர் திரு.எஸ்.எம்.குரூஸ் ஓய்வு நிலை அரசாங்க அதிபர்
திரு-கே.எஸ்.வசந்தகுமார் பிரதேச செயலாளர்-மன்னார்
திரு- எம்.பரமதாசன பிரதேச செயலாளர்;-நானாட்டான்
திரு-செ.கேதீஸ்வரன் பிரதேச செயலாளா-முசலி
திரு-மா.ஸ்ரீஸ்கந்தகுமார் பிரதேச செயலாளா-மாந்தை மேற்கு
திரு-எம்.எவ்.சி.சத்தியசோதி பிரதேச செயலாளா-மடு
இவர்களின் சிறப்புரைகளில் வவுனியாவில் இருந்து வருகை தந்திருந்த தமிழருவி வி.சிவகுமாரன் அவர்கள் தான் பார்த்த கலை இலக்கியவிழாக்களில் இவ்விழா மிகவும் தன்னை கவர்ந்ததாகவும் ஒவ்வொரு நிகழ்வுகளும் மிகவும் வித்தியாசமாகவும் நுட்பமான அனுகுமுறைகள் நெறியாள்கைகள் நேர்த்தியாக இருந்தது என தனது உரையில் வாழ்த்தினார்
இவர்களோடு மன்னார் மாவட்டத்தின் வைத்திய கலாநிதிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உயர் அதிகாரிகள் அரச உத்தியோகத்தர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் அனைவரும் சு10ழ்ந்து கொள்ள வாத்திய இசைமுழங்க இப்பிரதேச கலைஇலக்கிய விழா எஸ்.nஐயந்தன் துரம் அவர்களின் நன்றியுரையோடு இனிதே நிறைவேறியது…
மன்னார் பிரதேச கலாசாரப்பேரவை பெருமையுடன் நடாத்திய பிரதேச இலக்கிய விழா-2015
Reviewed by Author
on
October 27, 2015
Rating:

No comments:
Post a Comment