மண்ணின் மனம் வீச, எங்கள் கலைகளையும்,கலைஞர்களையும் போற்றி அவர்களின் வளர்ச்சிக்கும் மன்னார் இணையம் முழு மூச்சுடன் செயலாற்றுகிறது.-S N டிலான் சூரியன் வானொலி
தடைகள் பல கடந்து மன்னார் மண்ணின் செய்திகளை உடன் அறிந்துகொள்ள வைப்பதில் மட்டுமன்றி உலக செய்திகளையும் சுடச் சுடத் தருவதில் ஈடு இணை இல்லா முதற்தர இணைய செய்தி வழங்குனராக பல தரப்பினரையும் கவர்ந்திருக்கும் எமது நியூ மன்னார் இணையச் சேவையினருக்கும் அதன் செய்தியாளர்களுக்கும் ஆறு ஆண்டுகள் கடந்து ஏழாவது ஆண்டில் தடம் பதிக்கும் இத் தருணத்தில் எனது சார்பான நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சாதாரணமாக இக்காலத்தில் செய்திச்சேவை நிறுவனம் ஒன்றை நடாத்திச் செல்வதில் எந்தளவு இக்கட்டான நிலைமைகளை சமாளிக்க வேண்டும் என்பது யாவரும் அறிந்ததே. எமது அரசியல் நிலையையும் கடந்து உண்மை தகவல்களை வழங்க வேண்டும், யாருக்கும் பக்க புகழ் பாடக் கூடாது என்பதிலும் தன் சேவையை செவ்வனே பொறுப்புடன் நிறைவேற்றுவதில் என்றும் இந்த நியூ மன்னர் இணையம் பின்னின்றதில்லை. இதற்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மண்ணின் மனம் வீச, எங்கள் கலைகளையும்,கலைஞர்களையும் போற்றி அவர்களின் வளர்ச்சிக்கும் இவ் இணையம் முழு மூச்சுடன் செயலாற்றுகிறது. சிறிய மூலதனத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சேவை இன்று பலரும் அஞ்சும்,பலராலும் பேசப்படும் ஒரு இணைய தகவலாளியாய் இணையத்தில் அநேகமாநோரால் தேடப்படும் ஒரு பக்கமாக மாறியிருக்கின்றது. ஆறாண்டுகள் அல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முதற்தர இணைய செய்தி சேவையாக வலம் வர என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
S N டிலான்
நிகழ்ச்சி முகாமையாளர்
சூரியன் வானொலி
சாதாரணமாக இக்காலத்தில் செய்திச்சேவை நிறுவனம் ஒன்றை நடாத்திச் செல்வதில் எந்தளவு இக்கட்டான நிலைமைகளை சமாளிக்க வேண்டும் என்பது யாவரும் அறிந்ததே. எமது அரசியல் நிலையையும் கடந்து உண்மை தகவல்களை வழங்க வேண்டும், யாருக்கும் பக்க புகழ் பாடக் கூடாது என்பதிலும் தன் சேவையை செவ்வனே பொறுப்புடன் நிறைவேற்றுவதில் என்றும் இந்த நியூ மன்னர் இணையம் பின்னின்றதில்லை. இதற்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மண்ணின் மனம் வீச, எங்கள் கலைகளையும்,கலைஞர்களையும் போற்றி அவர்களின் வளர்ச்சிக்கும் இவ் இணையம் முழு மூச்சுடன் செயலாற்றுகிறது. சிறிய மூலதனத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சேவை இன்று பலரும் அஞ்சும்,பலராலும் பேசப்படும் ஒரு இணைய தகவலாளியாய் இணையத்தில் அநேகமாநோரால் தேடப்படும் ஒரு பக்கமாக மாறியிருக்கின்றது. ஆறாண்டுகள் அல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முதற்தர இணைய செய்தி சேவையாக வலம் வர என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
S N டிலான்
நிகழ்ச்சி முகாமையாளர்
சூரியன் வானொலி
மண்ணின் மனம் வீச, எங்கள் கலைகளையும்,கலைஞர்களையும் போற்றி அவர்களின் வளர்ச்சிக்கும் மன்னார் இணையம் முழு மூச்சுடன் செயலாற்றுகிறது.-S N டிலான் சூரியன் வானொலி
Reviewed by NEWMANNAR
on
October 27, 2015
Rating:

No comments:
Post a Comment