பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு?
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
எதிர்வரும் சில தினங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கலாக பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்களின் விலைகளே அதிகரிக்கப்படவுள்ளன. மேலும் சமையல் எரிவாயு, இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதா கத் தெரிய வருகிறது.
இலங்கை ரூபாவின் பெறுமானத்தை நிலையாகப் பேணத் தவறியமையே குறித்த விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, உலக வர்த்தக சந்தையில் எரிபொருட்களின் விலையில் வீழ்ச் சி ஏற்பட்டுள்ளபோதிலும் இலங்கை ரூபாவின் நிலையான பெறுமானத் தைப் பேணத் தவறியதன் காரணமாக அந்த விலை வீழ்ச்சியை நுகர்வோர் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத் தின் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கிணங்க சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் சிலவற் றின் விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அதன் பின்னர் குறித்த சில உணவுப் பொருட்களின் விலை யில் அதிகரிப்பு ஏற்படவில்லை. இந்நிலையிலேயே எதிர்வரும் சில தினங்களில் விலை அதிக ரிக்கப்பட வுள்ளதாகத்தெரிய வருகிறது. இதேவேளை இறக்குமதி செய்யப்படும் வாகனங்க ளின் விலை அண்மையில் அதிகரிக் கப்பட்டபோதிலும் மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் தெரிய வருகிறது.

Reviewed by Author
on
October 11, 2015
Rating:

No comments:
Post a Comment