அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை நிலபுல வர்த்தக சந்தை தொடர்பான சர்வதேசப் பார்வை...


இலங்கையின் உள்நாட்டு போர் முடிவிற்கு வந்ததற்கு பின்னர் பொருளாதார ரீதியாக பாரிய வளர்ச்சியடைந்து வருகின்றது. சுற்றுலாத்துறை மற்றும் நிலபுல வர்த்தகத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டிருக்கின்றது, சர்வதேச முதலீட்டாளர்கள் இதனை எவ்வாறு நோக்குகின்றனர்?

சங்ரில்லா ஹோட்டல்கள் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரதானி நெலுக டீ அல்விஸ் கருத்து தெரிவிக்கையில்,

"2009 க்கு பின்னரான சமாதான சூழ்நிலைகளை தொடர்ந்து மீள் நிர்மாண நடவடிக்கைகளின் ஊடாக உறுதியான வளர்ச்சிப்போக்கினை காட்டுகின்றது. குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துவரும் சுற்றுலாத்துறையின் மூலம் முதலீட்டாளர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுவரும் பல நோக்கு கொண்ட சங்ரில்லா அபிவிருத்தி திட்டத்தின் மூலம் குடியிருப்பு கோபுரம், வர்த்தக மையம் மற்றும் ஹோட்டல் வசதி போன்ற அனைத்து தேவைகளும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யப்படுகின்றன.

நான்கு படுக்கையறைகள் வரையிலான அபார்ட்மெண்ட்கள், 16 பெண்ட் ஹவுஸ்கள், நீச்சல் தடாகம், காட்சி அரங்கு, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் 700 வாகணங்கள் நிறுத்தி வைக்கக்கூடிய நவீன முறையிலான தரிப்பிட வசதிகளையும் கொண்டிருக்கின்றது.

இலங்கை முதலீட்டு சபையின் தரவுகளின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2014 ம் ஆண்டளவில் 1.6 பில்லியனாக காணப்படுகின்றது.

கடந்த காலங்கள் முதல், நாடு பூரான அபிவிருத்திகளுடன் அரசாங்கம் கொழும்பு நகரின் அபிவிருத்திப் பணிகளில் அதிகளவான கரிசணை காட்டிவருகின்றது. கடந்த ஆண்டுகளில் பாரியளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை கொழும்பு நகரில் மேற்கொண்டிருந்தது என தெரிவித்தார்."

வீதி அபிவிருத்திகள் மற்றும் ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் தற்போதைய கண்டி போன்ற பிரதான நகரங்களை இணைக்கும் அதிவேக வீதிகள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப மேம்பாட்டு வசதிகள் போன்றவைகளும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் இவ்வாறான உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், ஏனைய அபிவிருத்தி அடைந்துவரும் கண்டி, கம்பஹா, காலி போன்ற நகரங்களின் மீதான முதலீட்டு வாய்ப்பினை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. அடுத்த சில வருடங்களுக்கான உள்நாட்டு ஆதன சந்தையின் போக்கு குறித்து வினவப்பட்டபோது,

"குறைந்த வட்டி வீதம் மற்றும் மிதமான பணவீக்கம் ஆகியன நிலபுல வர்த்தக துறையினை வலுப்படுத்தும் காரணிகள் என தெரிவித்தார்.”

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

 “அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாலர்கள் உறுதியான வளர்ச்சியடைந்து வரும் சூழல் ஒன்றில் முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். நிதியியல், சுற்றுலா, மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற சேவைத்துறைகளின் அண்மைக்கால வளர்ச்சி கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க அளவு கேள்வியினை அதிகரித்திருக்கின்றது.

கொழும்பு மத்தியானது ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புகளின் மையமாக காணப்படுகின்ற அதேவேளையில், புற நகர்ங்களில் அமைக்கப்படும் வீடுகள் மற்றும் விலாக்கள் மத்திய தர வர்க்கத்தினரையும் அதனுடன் இணைக்கின்றது.

எவ்வாறு இருப்பினும் நாட்டின் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஒருசில தடைகள் இவர்களின் ஆர்வத்தினை குறைப்பவைகளாக அமைந்திருக்கின்றன. நான்கு மாடிகளுக்கு மேல் அபார்ட்மெண்ட் கொள்வணவு செய்யும்போது காணப்படும் சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக கருத்தில் கொள்கின்றனர்.

மேலும் ஒரு அம்சமாக, கொள்வனவுகளுக்காக கையாளப்படும் பணப்பரிமாற்ற முறைகள் மீதான கண்காணிப்பு ஒழுங்குகளும் காணப்படுகின்றன.”எவ்வாறாயினும் சாதகத்தன்மைகள் பாதகங்களை விட அதிகமாகவே காணப்படுகின்றன.

ஆதனங்களுக்கான கேள்வி உள்நாட்டிலும் புலம்பெயர்ந்தோர் பக்கமாக இருந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகவே இலங்கை ஆதன சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்களுக்கு சாதகமாகவே காணப்படுகின்றது.

Lamudi பற்றி

2013 ல் ஆரம்பிக்கப்பட்ட Lamudi வளர்ந்துவரும் சந்தைகளை மையமாக கொண்டு இயங்கிவரும் உலகளாவிய ஆதன சந்தைப்படுத்தல் தளமாகும்.

மிக துரிதமாக வளர்ந்துவரும் இத்தளம் (நிறுவனம்), ஆசியா, மத்தியகிழக்கு, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளடங்களாக 32 நாடுகளில் 900000 இற்கும் மேலான நிரற்படுத்தல்களை கொண்டு இயங்கி வருகின்றது.

இந்தமுன்னனி நிலபுல சந்தைப்படுத்தல் தளம், விற்பனை, கொள்வனவு, வாடகைவசதிகளுடன் கூடிய மிகபாதுகாப்பானதானதும் இலகுவாக ஆதனங்களைப் பெற்றுக்கொள்வதற்குமான சேவையினை வழங்கிவருகின்றது.

இலங்கை நிலபுல வர்த்தக சந்தை தொடர்பான சர்வதேசப் பார்வை... Reviewed by Author on October 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.