விண்கல்லின் பயண பாதையை மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள்...
எதிர்காலத்தில் விண்கல்லொன்று மோதுவதால் ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து பூமியைப் பாதுகாக்கும் முகமாக அந்த விண்கல்லின் பயணப்பாதையை மாற்றுவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர்.
இதன் ஆரம்ப கட்டமாக சிறிய ஒரு ஜோடி இரட்டை விண்கற்கள் மீது விண்கலமொன்றை மோதவிட்டு அவற்றின் பயணப் பாதையை மாற்ற முடியுமா என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அயிடா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன் பிரகாரம் 160 மீற்றர் மட்டுமே அகலமுடைய டிடிமூன் என்றழைக்கப்படும் முட்டை வடிவான விண்கல்லின் பயணப்பாதையை மாற்றுவது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தப் பரிசோதனை முயற்சிக்காக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரு விண்கலங்கள் ஏவப்படவுள்ளன. அவற்றில் ஒரு விண்கலம் குறிப்பிட்ட விண்கல்லுடன் மோதுகையில் மற்றைய விண்கலம் அந்த நிகழ்வின் விளைவைப் படம் பிடிக்கவுள்ளது.
இது தொடர்பில் பிரான்ஸின் நன்டெஸ் நகரில் இடம்பெற்ற ஐரோப்பிய கோள்மண்டல விஞ்ஞான கூட்டத்தில் விஞ்ஞானிகளால் விபரிக்கப்பட்டது.
அதேசமயம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் டிடிமூன் விண்கல்லையும் மற்றைய 750 மீற்றர் அகலமான டிடிமொஸ் விண்கல்லையும் திசைதிருப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
விண்கல்லின் பயண பாதையை மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள்...
Reviewed by Author
on
October 02, 2015
Rating:
Reviewed by Author
on
October 02, 2015
Rating:


No comments:
Post a Comment